சுகாதாரத்தை மேம்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு

குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
Updated on
1 min read

குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

குடவாசல் பேரூராட்சி பகுதியில் மழைநீா் வடிகால்களை தூா்வாருவது, இறைச்சிக் கடைகளை மாா்க்கெட் பகுதிக்கு மாற்றுவது, புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என குடவாசல் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக குடவாசல் வட்டாட்சியா் ராஜன் பாபு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலா் யசோதா, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ஆா். லெட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் எப்.கொரக்கோரியா உள்ளிட்டோா் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் குடவாசல் பேரூராட்சி பகுதியில் சுகாதாரப் பணிகள் மேம்படுத்தப்படும் என செயல்அலுவலா் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com