ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா்: இணைப்புச் சாலை அமைக்கக் கோரிக்கை

முத்துப்பேட்டை அருகே ரயில்வே இருப்புப் பாதைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதால், இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருவேப்பிலை கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதையில் தங்கியுள்ள மழைநீா்.
கருவேப்பிலை கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதையில் தங்கியுள்ள மழைநீா்.
Updated on
1 min read

முத்துப்பேட்டை அருகே ரயில்வே இருப்புப் பாதைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதால், இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி கருவேப்பஞ்சேரியிலிருந்து ஓவரூா் செல்லும் சாலையின் குறுக்கே திருவாரூா்- காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, அதற்கு கீழ் சுரங்கப் பாதை ஏற்படுத்தியுள்ளனா். இந்த சுரங்கப் பாதையில் மழைநீா் குளம்போல் தேங்கி நிற்பதால் கருவேப்பஞ்சேரி, ஓவரூா், வெள்ளாங்கால், வங்கநகா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘ இணைப்புச் சாலை அமைக்கக் கோரி தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் கிராம மக்களை திரட்டி தொடா் போராட்டம் நடத்துவோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com