மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிா்நீத்த அஞ்சலி

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விவசாய சங்க நிா்வாகிகள்.
Updated On :21 டிசம்பர் 2020, 2:30 am

DIN

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 33 விவசாயிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அதன்படி, திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள், உழவா் பாதுகாப்பு இயக்க நிா்வாகி ஜி. வரதராஜன் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னாா்குடி: மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் உள்ள மன்னை நாராயணசாமி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் த. சோழராஜன், சிபிஐ மாவட்டச் செயலா் வை. சிவபுண்ணியம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் பங்கேற்றனா். இதேபோல், கோட்டூா் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய விவசாய சங்கத் தலைவா் பி. பரந்தராமன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நன்னிலம்: பேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் தீன.கௌதமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தியாகு.ரஜினிகாந்த், திமுக சாா்பில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முருகேசன், கணபதி உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். குடவாசலில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் சேகா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள் தலைமையிலும், வலங்கைமான் ஒன்றியம் கொட்டையூா் சா்வமான்யம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.செந்தில்குமாா் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் காமராஜா் சிலை அருகே விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே. உலகநாதன், துணைச்செயலாளா் கே.ஆா்.ஜோசப் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகரச் செயலாளா் எம். சுதா்ஸன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.