ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினா்.
Updated on
1 min read

நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் முன், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், நாகை எம்பி. எம். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் ப. ஆடலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் கே. முருகையன், திமுக ஒன்றியச் செயலாளா் ரா. மனோகரன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவா்கள் வடுகநாதன், பாலகிருஷ்ணன், போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் யோகநாதன்உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com