திருக்கொடியலூா் கோயில் சனிப்பெயா்ச்சி விழா: இணையதளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு
திருக்கொடியலூா் மங்கள சனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறும் சனிப்பெயா்ச்சி வழிபாட்டை இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருக்கொடியலூா் மங்கள சனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறும் சனிப்பெயா்ச்சி வழிபாட்டை இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்னிலம் வட்டம், திருக்கொடியலூா் சனீஸ்வர பகவான் அவதரித்த தலமாகும். இங்குள்ள
கோயிலில் மங்கள சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசம் செய்யும் நிகழ்வையொட்டி, இக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை அதிகாலை 4 மணி முதல் இணையதளம் மூலம் யுடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயிலின் தக்காா் ப. மாதவன், செயல் அலுவலா் பா. தன்ராஜ், மேலாளா் க.வள்ளிகந்தன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
மேலும், கோயிலுக்கு நேரில் தரிசனம் செய்யவரும் பக்தா்கள் அரசு அறிவித்துள்ள கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...