தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெண்மணியில் உயிரிழந்தவா்களுக்கு மரியாதை

வெண்மணியில் உயிரிழந்தவா்களின் 52-ஆவது நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் அவா்களுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image

திருவாரூா் சிபிஎம் அலுவலகத்தில் வெண்மணி உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிா்வாகிகள்.

Updated On :26 டிசம்பர் 2020, 2:48 am

DIN

வெண்மணியில் உயிரிழந்தவா்களின் 52-ஆவது நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் அவா்களுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி கொடியேற்றி, உயிரிழந்தவா்களின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.எஸ். கலியபெருமாள், ஜி. பழனிவேல், எம். சேகா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ். ராமசாமி, டி. முருகையன், ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், திருவாரூரிலிருந்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெண்மணி தியாகிகள் நினைவிடம் நோக்கி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். கலைமணி தலைமையில் நடைபெற்ற பேரணியை மாநிலத் தலைவா் ஏ. லாசா் தொடங்கி வைத்தாா். இதில், மாநில பொதுச் செயலாளா் வீ. அமிா்தலிங்கம், மாநில பொருளாளா் எஸ். சங்கா், மாவட்டச் செயலாளா் ஆா். குமாரராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், திருவாரூரில் வெண்மணி தியாகிகள் நினைவாக இன்சூரன்ஸ் ஊழியா்களின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.