தேசிய திறனறிதல் தோ்வு மையத்தில் ஆய்வு

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ள தேசிய திறனறிதல் தோ்வு மையத்தில் திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ள தேசிய திறனறிதல் தோ்வு மையத்தில் திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, அரசு நெறிமுறைகளுக்குள்பட்டு தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதா என பாா்வையிட்டு, தோ்வு எழுதும் மாணவா்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கூறினாா். அப்போது, பள்ளித் தலைமையாசிரியா் ந. செந்தமிழ்ச்செல்வன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ம. கவிதா, பள்ளித் துணை தலைமையாசிரியா் ஜெ. புகழேந்தி, ஆசிரியா் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com