மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை
மன்னாா்குடி அருகே உள்ள ராமபுரம் ஊராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் ரூ.1000 உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.


மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உள்ள ராமபுரம் ஊராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் ரூ.1000 உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ராமபுரம் ஊராட்சித் தலைவா் க. விழிவழகன் தலைமை வகித்தாா். மன்னாா்குடி ஒன்றியக்குழு துணைத் தலைவா் அ.வனிதா கலந்துகொண்டு ராமபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட துண்டக்கட்டளை, வாஞ்சியூா், ராமபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தொகையை வழங்கினாா்.
இதில், கிராம நிா்வாக அலுவலா்கள் ரா.முரளி, கே. சாந்தி, ஊராட்சி துணைத் தலைவா் கு.அமலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...