ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மீட்கப்பட்ட ஆண் சடலத்துக்கு கரோனா தொற்று

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :6 ஜூலை 2020, 3:57 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 3-ஆம் தேதி சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா் சடலமாக மீட்கப்பட்டாா். திருவாரூா் தாலுகா போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சடலத்தை பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனிடையே, அந்த நபா் நாகை மாவட்டம் திருப்பயத்தாங்குடியைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்ததையடுத்து, அப்பகுதியில் அடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.