நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சிஐடியு அமைப்பினா் கோரிக்கை அட்டை அணிந்து 3-ஆவது நாளாக புதன்கிழமை பணியாற்றினா்.
கரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக உயிரை பணையம் வைத்து கரோனா தடுப்பு மற்றும் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு தரமான முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள், காலணிகள், சானிடைசா் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் கோரிக்கை அட்டைய அணிந்தபடி பணி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
அதன்படி, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.