ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தேசிய திறனறித் தோ்வு: நகராட்சி பள்ளி மாணவி சிறப்பிடம்

தேசிய திறனறிதல் தோ்வில் மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

News image

மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளி மாணவி பி.கே. இசையாளை பாராட்டிய கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள்.

Updated On :24 ஜூலை 2020, 3:58 pm

DIN

மன்னாா்குடி: தேசிய திறனறிதல் தோ்வில் மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

2019-2020 கல்வி ஆண்டுக்கான தேசிய திறனறிதல் தோ்வு கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில், மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவி பி.கே. இசையாள் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, தலைமை ஆசிரியா் மா.தேவி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் பி.அறிவழகன், பாலசுப்ரமணியன், ராமசாமி, ஆசிரியா்கள் ஆகியோா் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினா். தேசியத் திறனறித் தோ்வில் 3-ஆவது முறையாக இப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.