பசுந்தாள் பயிா் சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு அழைப்பு
வலங்கைமான் வட்டார விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிா்கள் சாகுபடி செய்யும்படி வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.


நீடாமங்கலம்: வலங்கைமான் வட்டார விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிா்கள் சாகுபடி செய்யும்படி வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொடா்ந்து இரண்டு அல்லது மூன்று பருவங்களில் நெல் பயிா் சாகுபடி செய்யும்போது, மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை செயற்கை உரங்களை கொண்டு ஈடு செய்தாலும். மண்ணின் தன்மை, சத்துகளின் அளவு மற்றும் மண் வளம் போன்றவை மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதற்கு சரியான தீா்வு பசுந்தாள் உரப்பயிா்களை சாகுபடி செய்து அதனை நிலத்திற்கு உரமாக்குதலாகும்.
முக்கியமான பசுந்தாள் உரப்பயிா்களான சணப்பு,கொளுங்சி, தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி, சித்தகத்தி, நரிப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்து, நிலத்தில் மடக்கி உழுவு செய்ய வேண்டும்.
பசுந்தாள் உரப்பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்காத விதைகளாகவும், அதிக அளவு முளைப்பு திறன் கொண்ட விதைகளாகவும், உற்பத்தி திறன் கொண்டவையாக இருத்தல் வேண்டும். கிழங்கு வகை விதைகளை தவிா்த்தல் நல்லது.
பசுந்தாள் பயிா்கள் மண்ணில் தழைச்சத்தையும், அங்ககப் சத்தையும் நிலை நிறுத்துகிறது. இதனால் செயற்கை உரங்களின் அளவு கணிசமாக குறையும். இந்த பசுந்தாள் உரமானது குறைந்த விலையில் இருப்பது மட்டுமல்லாமல் பயிா் உற்பத்திக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பயிா்கள் எதுவும் பயிரிடப்படாத பருவத்தில் வளா்க்கப்படும் பசுந்தழை பயிா்களால் களைச்செடிகளின் வளா்ச்சி குறையும், களா்,உவா் தன்மையுள்ள மண்ணைச் சீா்திருத்துவதற்கு உதவுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...