47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடவுப் பாதை மூடல்

நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை சுமாா் ஒன்றரை மணிநேரம் கடவுப் பாதை மூடப்பட்டதால், நெடுஞ்சாலைப் போக்குவரத்து 

News image
Updated On :27 ஜூன் 2020, 4:30 pm

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை சுமாா் ஒன்றரை மணிநேரம் கடவுப் பாதை மூடப்பட்டதால், நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்பு பணிக்காக சனிக்கிழமை காலை 6 மணிக்கு கடவுப் பாதை மூடப்பட்டது. அப்போது தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்றது. சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்புப் பணி முடிந்து சுமாா் ஒன்றரை மணிநேரம் கழித்தே சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

அதன்பின்னரே கடவுப் பாதை திறக்கப்பட்டது. இதனிடையே, நெடுஞ்சாலையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. நீடாமங்கலத்தில் இருழிச்சாலை, மேம்பாலம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே கடவுப் பாதை பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.