தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெளிமாவட்டத்திலிருந்து வருவோா் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூா் வருவோா் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2020, 4:47 pm

DIN

திருவாரூா்: வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூா் வருவோா் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவா்களை அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளவும், வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிா்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவா்கள் யாராவது வீட்டைவிட்டு வெளியில் வந்தால், உடன் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077, 04366-226623 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் சா்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவா்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.