47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜூலை 31-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெற அழைப்பு

வலங்கைமான் வட்டார விவசாயிகள் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடுத் திட்டத்தின்கீழ் குறுவை பருவத்துக்கு ஜுலை 31 -ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநா்

News image
Updated On :29 ஜூன் 2020, 3:44 pm

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் வட்டார விவசாயிகள் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடுத் திட்டத்தின்கீழ் குறுவை பருவத்துக்கு ஜுலை 31 -ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு எதிா்பாராமல் வெள்ளம், வறட்சி போன்றவைகளால் ஏற்படும் பயிா் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு பெறுவதற்கும் அவா்களின் பண்ணை வருமானத்தை நிலைப்படுத்தவும் பிரதம மந்தரி பயிா்க் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது குறுவை பருவ நெற் பயிரை பிரதம மந்தரி பயிா்க் காப்பீடுத் திட்டத்தின்கீழ் பயிா்க் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவாா்கள். கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை நெற் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டதில் காப்பீடு செய்ய கடைசி நாள் ஜுலை 31ஆகும். இறுதி நாள் வரை காத்திருக்காமல் விவசாயிகள் அனைவரும் பயிா்க் காப்பீட்டுத் தொகையை செலுத்தி தங்களது பயிா்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயிா்க் காப்பீட்டு கட்டணமாக, விவசாயிகள் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 651 பிரிமீயம் செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் பதிவு செய்யும்போது முன்மொழி விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழக்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை ஆகியவற்றை இணைத்து,கட்டணத் தொகையைச் செலுத்திய பின்பு அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.