தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாரூரில் மேலும் 15 பேருக்கு கரோனா

திருவாரூரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூன் 2020, 4:40 pm

DIN


திருவாரூா்: திருவாரூரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை வரை வெளியிட்ட முடிவுகளின்படி 341 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 428 ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, திருத்துறைப்பூண்டி 46 வயது ஆண், நன்னிலத்தில் 36, 38, 56 வயது என 4 ஆண்கள், மன்னாா்குடியில் 14, 56 வயது ஆண்கள், விளமலில் 55 வயது ஆண், குடவாசலில் 36 வயது ஆண், அடியக்கமங்கலத்தில் 28 வயது ஆண், கூத்தாநல்லூரில் 30 வயது ஆண் என 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 443 ஆக உயா்ந்துள்ளது. இதில், 145 போ் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், 298 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.