நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்கொள்முதல் புகாா் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியா்

நெல்கொள்முதல் குறித்த புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.

News image

குன்னியூா் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் த. ஆனந்த்.

Updated On :5 அக்டோபர் 2020, 5:20 pm

DIN

நெல்கொள்முதல் குறித்த புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.

திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட குன்னியூா், கோமல் பகுதிகளிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை, திங்கள்கிழமை ஆய்வு செய்தபின் அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டு காரீப் பருவத்துக்காக, தற்போது வரை 216 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 2,500 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இதுவரை 3,640 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் 137 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மேலும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 1,000 மூட்டைகள் வரை நெல்கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்கொள்முதல் தொடா்பாக பெறப்படும் புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளின் எடை மற்றும் தரத்தை ஆய்வு செய்து, கொள்முதலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணுக் கருவியின் செயல்பாடு குறித்தும், இருப்பு வைக்கப்பட்டுள்ள சாக்குகளின் விவரம், நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளின் விவரங்கள் குறித்து கொள்முதல் நிலைய அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, முதுநிலை மண்டல மேலாளா் மணிவண்ணன், துணை மேலாளா் ரெங்கநாதன், துணை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.