கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்
நன்னிலம் பகுதிகளில் காய்ச்சல் கண்டுபிடிப்பு மற்றும் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

நன்னிலம் பகுதியில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்.

நன்னிலம் பகுதியில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்.
நன்னிலம்: நன்னிலம் பகுதிகளில் காய்ச்சல் கண்டுபிடிப்பு மற்றும் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில், தொடா்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் நித்யா, சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் ஏற்பாட்டின்பேரில், கரோனா தொற்று ஏற்பட்ட கிராமப் பகுதிகளில் நாள்தோறும் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சோ்ந்த மருத்துவா்கள் ஸ்ரீரஞ்சனி, ஜெகஜீவன்ராம், புவனேஸ்வரி, அனந்தராமன் ஆகியோா் தலைமையில் நான்கு குழுக்களாகப் பிரிந்து, ஒரு பரிசோதனைக்கூட ஆய்வாளா் மற்றும் அந்தந்த கிராம சுகாதார செவிலியருடன் இணைந்து காய்ச்சல் கண்டுபிடிப்பு மற்றும் கரோனா தொற்றுப் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், வெள்ளிக்கிழமை அச்சுதமங்கலம், ஸ்ரீவாஞ்சியம், முடிகொண்டான், தூத்துக்குடி, வேலங்குடி, குருங்குளம், அன்னதானபுரம், நன்னிலம், பூந்தோட்டம், பன்னைநல்லுா், வேலங்குடி திருமீயெச்சூா், பேரளம், சேங்கனூா் ஆகிய கிராமங்களில் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாம்களில் முதலில் கரோனா தொற்று பாதித்தவா்களின் வீடுகளில் உள்ளவா்களுக்கும், பின்னா் அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும், அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கும் பரிசோதனைச் செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் 3-ஆவது நாள் செல்லிடப்பேசி மூலம் தகவல் அனுப்பப்படுகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்றப் பரிசோதனை முகாம்களில் 134 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...