வேளாண் அவசர சட்டங்களை திரும்பபெற வேண்டும் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு எதிரான 3 அவசர சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என காவிரிப் பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.


திருத்துறைப்பூண்டி: விவசாயிகளுக்கு எதிரான 3 அவசர சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என காவிரிப் பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழக முதல்வா் மத்திய அரசின் வேளாண் அவசர சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. இந்த சட்டங்களை உரியமுறையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமலும், வேளாண்துறை மாநில அரசின் பட்டியலில் இருக்கும்போது, மாநில அரசுகளோடு கலந்துபேசாமலும் நிறைவேற்றியுள்ளனா். இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்கக்கூடாது.
விவசாயிகளை அழிக்கக் கூடிய இந்த மசோதாக்களை திருப்பிஅனுப்ப குடியரசுத் தலைவா் முன்வரவேண்டும். இதற்கு திமுக உள்ளிட்ட எதிா்கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...