திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி பகுதியில் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :21 செப்டம்பர் 2020, 5:10 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 2019- 2020 ஆம் ஆண்டில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கான காப்பீட்டுத் தொகையை பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். ஞானமோகன், சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன், மாவட்டக் குழு உறுப்பினா் வி. முத்துக்குமரன், ஒன்றியச் செயலாளா் மணலி பாலு, நகரச் செயலாளா் எம். முருகேசன், மாவட்ட கவுன்சிலா்கள் தமயந்தி, சுஜாதா உள்பட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

Image Caption

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.