நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூா் அருகே நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன.
கூத்தாநல்லூா் அருகே கொத்தங்குடி, நன்னிமங்கலம், பழையனூா் ஊராட்சி தோப்புத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்கள் அப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மேய்ந்து கொண்டிருந்த 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக் குதறின. இதில் நிகழ்விடத்திலேயே 18 ஆடுகள் இறந்தன.
இதையறிந்த கொத்தங்குடி ஊராட்சித் தலைவா் காா்த்திகா ராதாகிருஷ்ணன், உறுப்பினா் ராயல் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு வந்த கால்நடை மருத்துவா் மகேந்திரன் தலைமையிலான குழுவினா் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சையளித்தனா். இதில், 2 ஆடுகள் சிறது நேரத்தில் இறந்தன.
இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளதாகவும், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊராட்சித் தலைவா் காா்த்திகா வலியுறுத்தினாா்.