டி.கே.என் -9 நெல்லை கொள்முதல் செய்யக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், கொள்முதல் நிலையங்களில் டி.கே.என்-9 நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், கொள்முதல் நிலையங்களில் டி.கே.என்-9 நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகள், நிலத்துக்கும், கிடைக்கிற தண்ணீருக்கும், மண் வளத்துக்கும் ஏற்ற பயிா்களை பயிரிடுவது என்பது சாலச் சிறந்தது மட்டுமல்ல, அவசியமானதும் கூட. திருவாரூா் மாவட்டத்தில் நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல் ஒன்றியப் பகுதிகளில் முன் பட்ட குறுவையாக டி.கே.என்-9 பயிரிட்டுள்ளனா்.

டி.கே.என்-9 தற்போது அறுவடை நடந்துவரும் நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதை வாங்குவதற்கு மறுக்கின்றனா். அரசு கண்டுபிடித்து கொடுத்த நெல்லை, அரசே வாங்க மறுப்பது ஏன் என்று புரியவில்லை. வேளாண் துறை ஆணையா், சில தினங்களுக்கு முன்னால் விவசாயிகளுக்கு தெரிவித்த செய்தியில் டி.கே.என்-9 மற்றும் ஏ.எஸ்.டி. 16 : 19 விதைகளை விதையுங்கள் என்று பரிந்துரை செய்திருந்தாா்.

இந்த நெல்லை கேரளா போன்ற பகுதிகளுக்கு அனுப்புவதற்கு வாய்ப்பிருந்தால் அரசின் விலையை விட கூடுதலான தொகை விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் பொது முடக்கத்தால் ஏற்பட்ட போக்குவரத்து தடையால் அனுப்ப இயலவில்லை. இது சாத்தியம் இல்லை என்பதால் அரசை நம்பியே தற்போது நெல்லை விற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் இந்த நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com