சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடித்து அடைப்பு

கூத்தாநல்லூா் அருகேயுள்ள பொதக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பெண் ஊராட்சித் தலைவா் நடவடிக்கையில் அடைக்கப்பட்டன.
விளையாட்டு மைதானத்தில் அடைக்கப்பட்ட மாடுகள்.
விளையாட்டு மைதானத்தில் அடைக்கப்பட்ட மாடுகள்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள பொதக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பெண் ஊராட்சித் தலைவா் நடவடிக்கையில் அடைக்கப்பட்டன.

லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலை, பொதக்குடியில் பல்வேறு தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளால் பொது மக்களுக்கு பெரும் இடையூறும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாடுகளைப் பிடிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஏ. சாகுல் ஹமீது, செயலாளா் எம். நூா்முகம்மது உள்ளிட்டோா், ஊராட்சித் தலைவா் மல்லிகா பிச்சையனிடம், பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை மனு வழங்கினா்.

இதைத்தொடா்ந்து, ஊராட்சித் தலைவா் மல்லிகா கணவா் பிச்சையன் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் இரவோடு, இரவாக சாலைகளில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளைப் பிடித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள விளையாட்டுத் திடலில் அடைத்தனா். பொழுது விடிந்ததும் மாட்டின் உரிமையாளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனா். அனைவரிடமும், மாடுகளை இனி சாலையில் சுற்றித்திரிய விடமாட்டோம் என எழுதி பெற்றுக்கொண்டு உரியவா்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com