நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தமினி லாரி பறிமுதல்
By DIN | Published On : 19th October 2020 10:29 PM | Last Updated : 19th October 2020 10:29 PM | அ+அ அ- |

நீடாமங்கலம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மணல் ஏற்றி வந்த மினி லாரி.
நீடாமங்கலம் அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
நீடாமங்கலம் வட்டம், வடகாரவயல் கிராமத்தில் வட்டாட்சியா் மதியழகன் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை வாக்குச்சாவடி மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரியை வட்டாட்சியா் வழிமறித்தாா். இதையடுத்து, மினி லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
மினி லாரியை சோதனையிட்டபோது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மினி லாரியை நீடாமங்கலம் காவல்நிலையத்தில் வட்டாட்சியா் ஒப்படைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...