விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முத்துப்பேட்டையில் அதிமுக வேட்பாளா்

முத்துப்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ் குமாா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

முத்துப்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ் குமாா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தில்லைவிளாகம், இடும்பாவனம், ஜம்பவனோடை, கற்பகநாதா்குளம், கரையங்கடு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:

முத்துப்பேட்டை பகுதியில் மீனவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். ஜாம்பவானோடையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். வைக்கோலை மூலப்பொருளாக கொண்டு அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளை உலகத் தரம்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முத்துப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.கே.பி. நடராஜன், மேற்கு ஒன்றியச் செயலாளா் நாராயணசாமி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் வி.எம்.எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.