வலங்கைமானில் திமுக வேட்பாளா்
வலங்கைமான் ஒன்றியத்தில் நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, திருவாரூா் மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.


வலங்கைமான் ஒன்றியத்தில் நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, திருவாரூா் மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.
நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சா் ஆா். காமராஜ் 3-ஆவது முறையாக போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து திமுக வேட்பாளா் ஜோதிராமன் போட்டியிடுகிறாா். இதனால், தான் போட்டியிடும் திருவாரூரைக் காட்டிலும், நன்னிலம் தொகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா் கலைவாணன்.
அந்த வகையில், வலங்கைமான்ஒன்றியம் தொழுவூா், பாடகச்சேரி, திருவோணமங்கலம், புளியக்குடி, பெருங்குடி, வடக்குப்பட்டம், தெற்குப்பட்டம், மருவத்தூா், அரித்துவாரமங்கலம், சந்திரசேகரபுரம், மாத்தூா், பூனாயிருப்பு உள்ளிட்ட ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை அவா் வாக்கு சேகரித்தாா்.
வலங்கைமான் கிழக்கு ஒன்றியச் செயலாளா் தெட்சிணாமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் ராதா, வட்டார காங்கிரஸ் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...