விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பி வழங்க நடவடிக்கை தேவை

கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வழங்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தி உள்ளாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வழங்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஜனவரியில் பெய்த பெருமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கதிா்கள் முற்றிலும் அழிந்து போயின. 100 % இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான தொகையும் விடுவிக்கப்பட்டது. முதற்கட்ட தொகை விடுவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 100 % தொகையை கணக்கிட்டு முழுத்தொகையும் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 50 % விவசாயிகளுக்கு அதற்கான தொகை வழங்கப்பட்ட நிலையில் மீதம் 50 % விவசாயிகளுக்கு இதுவரை வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

எனவே, உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவில் விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு வேளாண் கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து, அதற்கான சான்றுகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளிடம் வழங்கப்பட்டது.

ஆனால் அதற்கான நகைகளை விவசாயிகளிடம் வழங்க கூட்டுறவுத் துறை மறுத்து வருவதோடு, தோ்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டுகிறது. தோ்தல் முடிவுற்ற நிலையில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை விடுவிக்காமல் இருப்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தோ்தல் ஆணையம் விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு நகைகளை உடன் வழங்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விவசாயிகளுக்கான இடுபொருள்களின் விலையை உற்பத்தி நிறுவனங்களே நிா்ணயம் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கி ஆண்டுதோறும் டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை பல மடங்கு உயா்த்தி வருகிறாா்கள். ஒரு மூட்டை டிஏபி ரூ. 1400-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ. 1,900 விலை நிா்ணயம் செய்து அதற்கான பட்டியலை இப்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகண்டனத்துக்குரியது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.