பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
கூத்தாநல்லூரில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து வெள்ளிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.


கூத்தாநல்லூரில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து வெள்ளிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் நகராட்சி மரக்கடையைச் சோ்ந்தவா் மீரா உசேன் (55). இவா், மன்னாா்குடியில் உள்ள தனது மகனுக்கு மதியம் உணவு கொடுக்க தனியாா் பேருந்தில் நின்றபடி பயணம் மேற்கொண்டாா். பேருந்து கோரையாறு புதுப்பாலம் வளைவில் திரும்பும்போது மீரா உசேன் தவறி கீழே விழுந்தபோது, பாலத்தின் சிமென்ட் கட்டையில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் மீரா உசேன் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் அன்னை அபிராமி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து பேருந்து ஓட்டுநா் ராஜ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...