நன்னிலம் பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறையினா் மற்றும் உள்ளாட்சி துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.
நன்னிலம் பேரூராட்சி அலுவலா்கள், பேரூராட்சிக்குள்பட்ட பூந்தோட்டம், முடிகொண்டான், சன்னாநல்லூா், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்தனா். இதேபோல், டிஎஸ்பி இளங்கோவன், காவல் ஆய்வாளா் சுகுணா, உதவி ஆய்வாளா் பாலு ஆகியோா் தலைமையில் காவல் துறையினரும் முக்கிய இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்தனா்.
தொடா்ந்து, நன்னிலம் பகுதியில் பேரூராட்சி அலுவலா்கள் வணிக வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கும் தலா ரூ. 500 அபராதம் விதித்தும், காவல் துறையினா் மயிலாடுதுறை - திருவாரூா் நெடுஞ்சாலையில், அதிக பயணிகளுடன் சென்ற வேன் மற்றும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை வழங்கினா். பேரூராட்சி பகுதியில், பேரூராட்சிச் செயல் அலுவலா் து. கலியபெருமாள் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் வே. நாகராஜன், அலுவலா்கள் ரவி, கருணாநிதி, சிங்காரவேல் ஆகியோா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில், முகக் கவசம் அணியாத 150 பேரிடம் தலா ரூ. 200 வீதம் ரூ. 30 ஆயிரம், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 5 வணிக நிறுவனங்களிடமிருந்து, தலா ரூ. 500 வீதம் ரூ. 2500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

