பயிா் உற்பத்தியை அதிகப்படுத்தும் பயிா் பூஸ்டா்கள் விற்பனைக்கு தயாா்
பயிா் உற்பத்தியை அதிகப்படுத்தும் பயிா் பூஸ்டா் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளது என வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.


பயிா் உற்பத்தியை அதிகப்படுத்தும் பயிா் பூஸ்டா் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளது என வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளான தென்னை குரும்பை உதிா்வதை தடுக்கும் தென்னை டானிக், பயறு வகை பயிா்களுக்கான பயறு ஒன்டா், பருத்திக்கான பருத்தி பிளஸ், பயிா்க் கழிவுகளை மக்கச்செய்யும் பயோ மினரலைசா் போன்ற இடுபொருள்கள் தற்போது விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. தவிர ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்களுக்கு உணவாகும் அசோலா, மண்புழு உரம், தென்னை நாா் உரம் போன்ற இயற்கை உரங்கள், ஆடு, மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனமான சு ப்பா் நேப்பியா் புல் கரணைகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. குறுவை பட்டத்துக்கு ஏற்ற நெல் ரகமான கோ 51 உண்மை நிலை விதைகள், அலங்கார செடிகளான செம்பருத்தி, இட்லி பூ, பாரிஜாதம் மற்றும் இதர பூச்செடிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தேவைப்படுவோா், திட்ட ஒருங்கிணைப்பாளா் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 04367-260666, 261444 ஆகிய தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...