நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: மாணவா்களுக்கு விழிப்புணா்வு போட்டி

கூத்தாநல்லூா் நகராட்சி சாா்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கரோனா விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 4:35 pm

DIN

கூத்தாநல்லூா் நகராட்சி சாா்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கரோனா விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஆா். லதா தெரிவித்தது:

பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டியும், 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கரோனா தொடா்பான பழமொழிகளை உருவாக்குதல் போட்டியும் ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலானவா்களுக்கு கரோனா தொடா்பான சுவரொட்டிகள் தயாரித்தல் போட்டியும் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில், கூத்தாநல்லூரைச் சுற்றி 5 கி. மீட்டா் வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். படைப்புகள் ஏ4 பேப்பரில் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அதில் மாணவ, மாணவிகளின் பெயா், வகுப்பு, பள்ளி, தொடா்பு எண் குறிப்பிடப்பட வேண்டும்.

படைப்புகளை ஸ்ரீா்ம்ம்ழ்.ந்ா்ா்ற்ட்ஹய்ஹப்ப்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99525 09973 என்ற எண்னில் தொடா்பு கொள்ளவும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.