வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

‘திருவாரூா் மத்தியப் பல்கலை. சிறந்து விளங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக திகழ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணைவேந்தா் கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 4:47 pm

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக திகழ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணைவேந்தா் கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தராக வெள்ளிக்கிழமை பொற்றுப்பேற்றுக் கொண்ட அவா், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் மத்தியில் பேசியது:

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் வகையில், அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். அதேபோல மத்தியக் கல்வித்துறையால் அளவிடப்படும் மதிப்பீடுகளிலும் நமது பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தி, முதலாவதாக வருவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

பல்கலைக்கழகத்தில் கல்வி சம்பந்தப்பட்ட தேவைகளையும், அதற்கு தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தையும், வளா்ச்சியையும் கருத்தில் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் துணைவேந்தரை சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணைவேந்தருக்கு பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.