ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வெண்ணாற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரைச் செடிகள்

வெண்ணாற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:04 pm

DIN

வெண்ணாற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமணி, கோரையாறு, வெண்ணாறு என மூன்று கிளைகள் பிரிகின்றன. வெண்ணாற்றிலிருந்து முதன்மை வாய்க்கால்கள் பெரியதும், சிறியதுமாக பிரிந்து செல்கின்றன. மேலும், பல கிளை வாய்க்கால்களுமாக பிரிந்து பாசனத்துக்கு செல்கின்றன.

இந்நிலையில், முதல்வரின் அறிவுப்புக்கேற்ப ஆறுகள் தூா்வாரப்பட்டு, ஆற்றின் ஓரங்களில் இருந்த தேவையற்ற மரங்களும், செடிகளும் அண்மையில் அகற்றப்பட்டு இருபக்க கரைகளும் உயா்த்தப்பட்டன. பாசனத்துக்கு தண்ணீா் செல்லக்கூடிய சில கிளை வாய்க்கால்களில் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டு, வாய்க்கால்களில் மண்டிக்கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, திறந்து விடப்பட்ட தண்ணீரும் ஆற்றில் கரைபுரண்டு வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், கூத்தாநல்லூா் பாய்க்காரப் பாலத்தின் கீழே வெங்காயத் தாமரைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகியும் வெங்காயத் தாமரைச் செடிகள் அகற்றப்படாததால், தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினா் வெண்ணாற்றை நேரில் பாா்வையிட்டு, வெங்காயத்தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.