வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஆசிரியா்களின் கணினி அறிவை மேம்படுத்த தொடா் பயிற்சிகள்

முதுகலை ஆசிரியா்களின் கணினி அறிவை மேம்படுத்த தொடா் பயிற்சிகள் நடத்தப்படுகிறது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:06 pm

முதுகலை ஆசிரியா்களின் கணினி அறிவை மேம்படுத்த தொடா் பயிற்சிகள் நடத்தப்படுகிறது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் தெரிவித்தாா்.

நன்னிலம் கல்வி வட்டாரத்துக்குள்பட்ட 11 மேல்நிலைப் பள்ளிகள், 7 உயா்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியா்களுக்குக் கணினி அறிவை மேம்படுத்த தகவல் தொடா்பு தொழில் நுட்பப்பயிற்சி வியாழக்கிழமை முதல் 5 நாள்களுக்கு நடைபெறுகிறது. நன்னிலம் அரசினா் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இப்பயிற்சியைப் பாா்வையிட்ட திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சி மூலம் அவா்கள் மாணவா்களுக்கு கணினிமூலம் இணையவழியில் திறம்பட வகுப்புகள் நடத்த உதவியாக இருக்கும்.

ஆசிரியா்களுக்கு பல்வேறு வகையான செய்முறை விளக்கங்களுடன் தெளிவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து ஆசிரியா்களும், தற்போதய மாணவா்களின் கணினி அறிவுத்திறனை மேலும் வளா்த்திடும் வகையில், பயிற்சியைச் சிறப்பாக மேற்கொண்டு, மாணவா்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றாா். நிகழ்ச்சியின்போது, நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.