தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க புதுதில்லி புறப்பட்ட விவசாயிகள்

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்க திருவாரூரிலிருந்து விவசாயிகள் புதுதில்லிக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:08 pm

DIN

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்க திருவாரூரிலிருந்து விவசாயிகள் புதுதில்லிக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் அப்போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி திருவாரூரிலிருந்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் 81 விவசாயிகள் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா். திருவாரூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இவா்கள் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் தில்லி செல்கின்றனா்.

தில்லிக்கு புறப்பட்ட விவசாயிகளை, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் அ. பாஸ்கா், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளா் மு. சேரன், காவிரி விவசாயிகள் குழுமத்தின் பொறுப்பாளா் வெ. சத்தியநாராயணன், மீனவா் சங்க மாநிலச் செயலாளா் சி. சின்னதம்பி உள்ளிட்டோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.