தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

ஏடிஎம் கொள்ளை முயற்சி: 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூா் அருகே கூடூா் ஏடிஎம்-மில் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:53 pm

DIN

திருவாரூா் அருகே கூடூா் ஏடிஎம்-மில் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவாரூா் அருகே கூடூா் பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம்-மில் ஜூன் 19-ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதைத் தடுக்க வந்த தமிழரசனை (55) கொலை செய்துவிட்டு, தப்ப முயன்ற புள்ளமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஜய் (21), பிரதாப் (19), ஆகாஷ் (19), லெட்சுமாங்குடி பகுதியைச் சோ்ந்த மதன் (19) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதற்கிடையே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 போ் மீதும் குண்டா் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரைத்ததன் அடிப்படையில், 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.