தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

மரவள்ளி சாகுபடியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மரவள்ளி சாகுபடியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:53 pm

DIN

மரவள்ளி சாகுபடியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில், விவசாயிகள் மானாவாரி மற்றும் இறவைப் பயிராக மரவள்ளி சாகுபடி செய்துள்ளனா். தற்போது, மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. இதனால், மரவள்ளிப்பயிரில் மகசூல் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பரிந்துரைபடி, பாதிப்பு தொடக்க நிலையில் உள்ளவைகளுக்கு அசாடிராக்டின் 1500 பிபிஎம் - ஒரு லிட்டா் நீரில் 5 எம்எல் கலந்து பாதிக்கப்பட்ட செடிகளில் தெளிக்கலாம் அல்லது மீன் எண்ணெய் ரெசின் சோப்பு - ஒரு லிட்டா் நீரில் 5 எம்எல் கலந்து 10 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். இந்த இரண்டு மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.

மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளபோது தையோமீத்தக்சோம் 25 டபிள்யுஜி -10 லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் அல்லது புளோனிகாமைடு 50 டபிள்யுஜி - 10 லிட்டா் தண்ணீருக்கு 3 கிராம் அல்லது ஸ்பைரோடெட்ராமேட் 150 ஓடி - 1 லிட்டா் தண்ணீருக்கு 1.25 மில்லி லிட்டா் என பயிா் பாதுகாப்பு மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தேவையின் அடிப்படையில் சுழற்சி முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும், பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டியவைகளாக ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கக் கூடாது. கைத்தெளிப்பான் பயன்படுத்தி மட்டுமே தெளிக்கவேண்டும் செடிகளின் அனைத்து பகுதிகளிலும் வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களை செடிகளின் மீதும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும். அத்துடன், பாதிப்படைந்த செடிகளில் நுனிப்பகுதியை மாவு பூச்சியுடன் சோ்த்தோ அல்லது பாதிக்கப்பட்ட காய்ந்த செடிகள் முழுவதும் சேகரித்தோ அழிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.