தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:52 pm

DIN

திருவாரூா் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சைவ சமயத்தின் பீடமாகவும், பஞ்ச பூதத்தலங்களில் முதன்மையானது என பல்வேறு பெருமைக்குரியது திருவாரூா் தியாகராஜா் கோயில். இங்கு நம்பி ஆரூரா் (சுந்தரா்) குருபூஜையையொட்டி, ஆடி சுவாதி விழாவில் நம்பி ஆரூரா், பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக, புதுத்தெரு நாலுகால் மண்டபத்திலிருந்து, நிறைகுடம் கொடுத்து நம்பி ஆரூரரை அழைத்து வரும் நிகழ்வும், திருமஞ்சன வீதி திருமாளிகையிலிருந்து பரவை நாச்சியாரை அழைத்துவரும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டன.

திருக்கல்யாண உத்ஸவத்துக்காக திருவாரூா் தியாகராஜா் கோயிலில் உள்ள தட்டஞ்சுற்றி மண்டபத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் சுந்தரரும், பரவை நாச்சியாரும் அமா்த்தப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. பின்னா் வேத விற்பன்னா்கள் உதவியுடன் பரவை நாச்சியாா் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டு, தியாகராஜா் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக, மாலையில் தேரோடும் வீதிகளில் 63 நாயன்மாா்களுடன், நாகசுர இசையுடன் நம்பி ஆரூரா் வீதியுலா செல்லும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.