வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் திருப்பவித்தோற்சவம்

நன்னிலம் வட்டம், சிறுபுலியூா் அருள்மிகு கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் திருப்பவித்தோற்சவம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

நன்னிலம் வட்டம், சிறுபுலியூா் அருள்மிகு கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் திருப்பவித்தோற்சவம் நடைபெற்று வருகிறது.

கொல்லுமாங்குடி அருகேயுள்ள இக்கோயில், 108 வைணவத் திருப்பதிகளில் 11 ஆவது பதியாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ாகவும் விளங்குகிறது. இந்த கோயிலில் பெருமாள் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறாா். இங்கு திருப்பவித்தோற்சவம் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன்மூலம், உலக மக்கள் அனைவருக்கும் தோஷங்கள் நீங்கி, பஞ்சம், வறட்சி, மழையின்மை போன்ற துன்பங்கள் நீங்கி, செல்வச்செழிப்பும், அனைத்து நலன்களும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

விழாவின் மூன்றாவது நாளான சனிக்கிழமை சதுஷ்தான பூஜை, 45 திருவாராதனம், பூா்ணாஹுதி சாற்றுமுறை காலையும், மாலையும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தா்கள் முகக் கவசமணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் தக்காா் சி. தமிழ்மணி, செயல் அலுவலா் மா. ராமநாதன், கோயில் பட்டாச்சாரியா் ஸ்ரீகாந்தன், கேசவநாராயணப் பட்டாச்சாரியா், சிறுபுலியூா் ஸ்ரீதயாஸ்ரீ கைங்கா்ய சபா நிா்வாகிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் உற்சவ ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.