தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருவாரூா் வந்தது 719 மெட்ரிக் டன் யூரியா

திருவாரூா் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான 719 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான 719 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, திருவாரூா் மாவட்டத்துக்கு ரூ. 12.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகளான தக்கைப் பூண்டு போன்றவை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக யூரியா 4,294 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2,385 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,193 மெட்ரிக் டன் வழங்குவதற்கான செயல்திட்டத்தின்படி, காரைக்கால் துறைமுகத்திலிருந்து சரக்கு ரயிலில் 2,600 மெட்ரிக் டன் இப்கோ யூரியா தஞ்சாவூருக்கு வரப்பெற்று, இதில், 719 மெட்ரிக் டன் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் யூரியா உரம் 1,017 மெட்ரிக் டன், டி.ஏ.பி உரம் 1,639 மெட்ரிக் டன், பொட்டாஷ் உரம் 1,005 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளும் தங்களிடம் உள்ள ஆதாா் அட்டை மற்றும் தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பம் ஆகியவற்றைக் கொண்டு, காலம்தாழ்த்தாமல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.