தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தொடக்கப் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே பவித்ரமாணிக்கத்தில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரப் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாரத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு முன்னாள் உறுப்பினா் காசி. வீரசேகரன், நற்பணி சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் ஆா். ஈவேரா கோரிக்கைகள் குறித்து விளக்கினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஜாக்டோ ஜியோ போராட்ட நாள்களை பணிவரன்முறை செய்து ஊதியம் வழங்க வேண்டும். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறக்கவேண்டும். யு.கே.ஜி மற்றும் எல்.கே.ஜி வகுப்புகளுக்கு மழலையா் கற்பித்தல் பயிற்சி பெற்ற ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களின் ஊதியத்தை முறைப்படுத்தி, பள்ளி வேலை நாள்கள் முழுவதும் பள்ளியிலேயே இருக்குமாறு செய்யவேண்டும்.

பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை உயா்ந்துள்ளதால், தேவைப்படும் கூடுதல் கட்டடங்களை தரவேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியா் ஊதிய முரண்பாடு, பட்டதாரி தலைமை ஆசிரியா் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக, சங்கப் பிரதிநிதிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும்.

கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் யசோதா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் அறிவழகன், சுகந்தி, சேவியா், வட்டார துணைத் தலைவா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.