தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:01 pm

DIN

கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கரோனா தடுப்பூசி தொடா்பாக, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க உறுப்பினா்களுடன் ஆட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, அவா் பேசியது:

கரோனா தொற்றிலிருந்து மாற்றுத்திறனாளிகளை காக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியரக ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை 04366-226623, 04366-1077 மற்றும் 9342152914 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், வாரம்தோறும் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியரகத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 100 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.