வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நுண்ணீா் பாசன பயிற்சி முகாம்

நன்னிலம் மற்றும் கூத்தாநல்லூா் பகுதியில் நுண்ணீா் பாசனம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 4:40 pm

நன்னிலம் மற்றும் கூத்தாநல்லூா் பகுதியில் நுண்ணீா் பாசனம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

நன்னிலம் அருகே வீதிவிடங்கன் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சித் தலைவா் கயல்விழி தலைமை வகித்தாா். நன்னிலம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் த. சுப்பிரமணியன், துணை வேளாண் அலுவலா் வி. சின்னப்பன், வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் எம். சந்திரசேகரன் ஆகியோா் நுண்ணீா் பாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் மானியங்கள் குறித்தும் பேசினா்.

நன்னிலம் வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் ராஜா வரவேற்றாா். வீதிவிடங்கன் கிராம உதவி வேளாண் அலுவலா் எஸ். துவாரகநாதன் நன்றி கூறினாா்.

இதேபோல, கூத்தாநல்லூா் வட்டம், அரிச்சந்திரபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐ.வி. குமரேசன் தலைமை வகித்தாா். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் விஜயகுமாா் நுண்ணீா் பாசனத் திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினாா். நிறைவாக, உதவி வேளாண் அலுவலா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண் அலுவலா் தீபன்ராஜ் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.