கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கல்லூரி: மாணவிகள் மகிழ்ச்சி
கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு மாணவிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.


கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு மாணவிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூா் உள்பட 10 இடங்களில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக சட்டப் பேரவையில் உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி அறிவித்தாா். இதனால், கூத்தாநல்லூா் வட்ட மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
வேளாண் பின்னணியை கொண்ட கூத்தாநல்லூா் மாணவிகள், பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரிகளில் சேர மன்னாா்குடி, தஞ்சை, கும்பகோணம், திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், பெரும்பாலான பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை மேற்படிப்பை தொடர அனுமதிப்பதில்லை.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா் க. பொன்முடி, திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...