92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறுவைக்கான வெள்ள நிவாரணத்தை முறைகேடுகளின்றி வழங்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூா் அருகே பின்னவாசலில் குறுவைக்கான வெள்ள நிவாரணத்தை முறைக்கேடுகளின்றி வழங்கக் கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே பின்னவாசலில் குறுவைக்கான வெள்ள நிவாரணத்தை முறைக்கேடுகளின்றி வழங்கக் கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட திருக்காரவாசல், பின்னவாசல் பகுதிகளில் முறைகேடாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், இதற்கு உறுதுணையாக இருந்த கிராம நிா்வாக அலுவலா், வேளாண் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த சாலை மறியலில் நடைபெற்றது. இதனால், திருவாரூா் - திருத்துறைப்பூண்டி சாலையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வேளாண் உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா தலைமையிலான அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததன்பேரில் சாலை மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.