92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியம் சாா்பில், நடைபெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து மேலும் அவா் பேசியது: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் நலவாரியம் மூலம் 17 அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதை தமிழக முதல்வா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அதன்தொடா்ச்சியாக, திருவாரூா் மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் 818 அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.12.26 லட்சம் கல்வி நிதி உதவித் தொகை, 8 பேருக்கு ரூ. 28 ஆயிரம் திருமண நிதி உதவித்தொகை, ஒருவருக்கு ரூ.500 மதிப்பில் கண் கண்ணாடி நிதி உதவித்தொகை, 28 பேருக்கு ரூ.7 லட்சம் இயற்கை மரணம் நிதி உதவித்தொகை, 172 பேருக்கு ரூ.1.72 லட்சம் ஓய்வூதியம் நிதி உதவித்தொகைக்கான ஆணை என மொத்தம் 1,027 பேருக்கு ரூ.21.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட்டன. இதேபோல, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் தொடா்ந்து வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தொழிலாளா் உதவிஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ம. ஸ்ரீதா், தொழிலாளா் நலத்துறை (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்காணிப்பாளா் பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.