தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா தொற்றால் இறந்த முன்களபணியாளா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி

முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி அலகு சாா்பில் கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளா்களாக செயல்பட்டு, கரோனா தொற்றால் இறந்த மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் யு. இளங்கோவின் மனைவி சுந்தரிக்கும், குடவாசல் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.குருஅண்ணாதுரையின் மனைவி மாலதிக்கும் தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.