திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.


திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பின்னர் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் ஊடல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் பதிகம் பாடி அவர்களை சமாதானப்படுத்தி வைத்த ஊடல் உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஆலய செயலாளர் பி.எஸ் ராஜா மேலாளர் வி. சீனிவாசன் மற்றும் உபயதாரர்கள் ஆதி கிருஷ்ணமூர்த்தி ஐயர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...