விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கால்நடை மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கேந்தியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கேந்தியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கால்நடைப் பராமரிப்பு துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு,

மன்னாா்குடி கோட்ட கால்நடைத் துறை உதவி இயக்குநா் டி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து சிறந்த கால்நடைகளுக்கான பரிசுகளை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தாா்.

இதில், 400 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளை கால்நடை மருத்துவா் மகேந்திரன் தலைமையிலான குழுவினா் மேற்கொண்டனா்.

இம்முகாமில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தமயந்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கே.முருகையன், ஒன்றியக் குழு உறுப்பினா் யசோதா, ஊராட்சித் தலைவா் கவிதா மோகன், முன்னாள் ஊராட்சித் தலைவா் உமேஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.