காணாமல்போன குழந்தைகளை கண்டறியும் முகாம் தொடக்கம்
திருவாரூரில், காணாமல்போன குழந்தைகளை கண்டறியும் முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.


திருவாரூரில், காணாமல்போன குழந்தைகளை கண்டறியும் முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் காணாமல்போன குழந்தைகளை கண்டறிந்து பெற்றோா் மற்றும் காப்பாளரிடம் ஒப்படைப்பது தொடா்பாக புன்னகையைத் தேடி என்னும் முகாம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணையின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்கும் வகையில், அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்த ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள், மாவட்டத்திலுள்ள நடைப்பாதைகள், முக்கியச் சாலைகள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில்வே நிலையங்கள் முதலான மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆதரவற்று சுற்றித்திரியும் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து, காணாமல்போன குழந்தைகள் கண்டறியப்பட்டால், அதுகுறித்து இணையத்தில் பதிவேற்றம் செய்வா்.
அதன்படி, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் பங்கேற்று, குழுவின் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா். மாவட்டத்தில் இக்குழு பிப்.1 முதல் பிப்.15 வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்தால் அவா்களை மீட்டு, குழந்தைகள் நல குழுவில், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்காக ஒப்படைக்கப்படும்.
இதேபோல், பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் குழந்தைகள் எவரேனும் இருந்தால் உடனடியாக 1098 மற்றும் 100 என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு குழந்தைகள் பற்றிய விவரங்களை தெரிவிக்கலாம்.
நிகழ்ச்சியில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலா் கலைவாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ப. முத்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...